Saturday 3 September 2016

48 சொற்களுக்குள் 02.09.16 போட்டி #20

48 சொற்களுக்குள்
02.09.16
போட்டி#1

தாலேலோ பாடும் தத்தை
தான் பெறாத முத்தைத்
தொட்டிலிலே இட்டுத்தான்
தாக்கல் அதை மெட்டில் வைக்க.....

தாலேலோ தங்கமே வம்சம்
தழைக்க வந்த சிங்கமே
தங்கமணி கண்ணுறங்கு
தாலாட்ட நானிருக்கேன்....

ஆறாவதா வந்த ஆறுமுக சாமியே
அஞ்சு பெண்ணைக் கடைத்தேற்ற
அன்னை பெத்த ரத்தினமே.... 

கண்மணியே அஞ்சாதே ஐயிரண்டு
கையிருக்கு உன்கூட
கருத்தான நெஞ்சு அஞ்சு
கலங்காது போராட.....

பாசத்துக்கும் பஞ்சமில்லை
பாரமில்லை உந்தனுக்கே
பயமென்ன நீயுறங்கு.....




போட்டி#2

கரும்பொற் சிலையதனில்
நல்முத்துப் புன்னகையைப் 
பதித்தவர் யாரணங்கே
பாலருந்தும் பாலகனோ....

பச்சைப்  பட்டாடையில்
பளிச்சென்று நிலமகளும்
பழையதோர் ஆடையில்
பவனிவரும் மண்மகளும்.....

இருவருமே தாயன்றோ
இன்பம் அவர்க்குச் சேயன்றோ
ஈதல் அவர் குணமன்றோ
ஈடு இணை இவர்க்குண்டோ.....

தோளில் ஊஞ்சல் ஆடும்
கற்பகம் அவள் பிள்ளை
நாளும் பசி தீர்க்கும் நெல்
மணிகள் இவள் பிள்ளை......

எதிர்பார்த்து வருவதில்லை 
தாயன்பு மறந்திட்டால்
ஏற்றம் நமக்கில்லை
தாயவளைக் காத்திடுவோம்......

கவியாக்கம் - ரத்னா வெங்கட்

No comments:

Post a Comment