Thursday 1 September 2016

# காதலன் படப்பாடல் என்னவளே மெட்டுக்குப் பாடல் 31.08.16 #18

# காதலன் படப்பாடல்
என்னவளே மெட்டுக்குப் பாடல் 
31.08.16

இன்னுயிரே என் இன்னுயிரே
உன்னைத் தொலைத்திட்டுத் தேடி நின்றேன்
என்னுயிரே உன்னை நினைத்ததுதான்
நான் செய்திட்ட தவறு என்றேன் -தங்கச்
சாவியைத் தொலைத் திட்டபூட் டெனவே
தந்தப்
பேழையைத் தேடி நின்றேன்
உயிரது நீங்கிட்ட மெய்யதுபோல்
உனைப்
பிரிந்ததும் பொய் ஆனேன்-இன்று
மெய்ம் மறந்து உயிர் தான் அலைய நான்
இரவல் மொழி யானேன்


மெல்லினமே மின்னும் இடையினமே நீ
வல்லினமானது ஏன்
மென்மையின் வடிவினில்
நேரெதிர் புகுந்திட்ட
வன்மையுமானது ஏன்
தீந்தமிழே திரு வாய்மொழியே நீ
ஊமையென் றானது ஏன்
தேன்நிலவோ என்று பார்த்திருக்க நீ
தேய்பிறை ஆனது ஏன் - இது
நிலைக்குமோ தழைக்குமோ
வான் மழை பொழிந்திடுமோ - என்
விழிவழி நுழைந்திட்ட கனவொன்று
உன் கண்களில் குடிபுகுமோ...... (இன்னுயிரே)

பொன்மயிலே நீ சாய்ந்த என் தோளது
நாளதும் 
வாடுதடி
பூவிரல் பற்றிய விரலது கையறு
கொம்பென
அலையுதடி
மணிமணியாய்ச் சொன்ன மொழியது எந்தன்
மனதினில் மருகுதடி
துளித்துளியாய்க் கொல்லும் விஷமதைப்போல் இந்தக்
காதலும்
ஆனதடி - உன்
கண்வழி என்முகம் பார்த்திடத் துடித்திருப்பேன்
என்
உயிர்வழி உன்முகம் நான் எனக்குள்ளே
பூட்டி வைப்பேன் (இன்னுயிரே) 

கவியாக்கம் - ரத்னா வெங்கட்

No comments:

Post a Comment